இன்டர்நேஷ்னல் மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடரில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் மற்றும் இந்தியா மாஸ்டர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வதோதராவில் நடைபெற்ற இபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணிக்கு ஷேன் வாட்சன் மற்றும் ஷான் மார்ஷ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஷான் மார்ஷ் 22 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வாட்ஷனுடன் இணைந்த பென் டங்க் அபாரமாக விளையாட அணியின் ஸ்கோரும் உயரத்தொடங்கியது. இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசித்தள்ளினர். 

Advertisement

இதன்மூலம் ஷேன் வாட்சன் முதலில் தனது சதத்தை பதிவுசெய்து அசத்திய நிலையில், அவரைத்தொடர்ந்து பென் டங்க்கும் தனது சதத்தைப் பதிவுசெய்தார். மேற்கொண்டு இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷேன் வாட்சன் 12 பவுண்டரி, 7 சிக்ஸர்களுடன் 110 ரன்களையும், பென் டங்க் 12 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 132 ரன்களையும் சேர்த்ததன் மூலம், ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களைக் குவித்தது. 

பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா மாஸ்டர்ஸ் அணிக்கு கேப்டன் சச்சின் டெண்டுல்கர் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். அதேசமயம் மறுமுனையில் களமிறங்கிய நமன் ஓஜா 19 ரன்களிலும், சௌரவ் திவாரி ஒரு ரன்னிலும், இர்ஃபான் பதான 11 ரன்னிலும் என விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த சச்சின் டெண்டுல்கர் 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வந்த சச்சின் டெண்டுல்கர் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 64 ரன்கள் எடுத்த கையோடு ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் யூசுஃப் பதான் 25 ரன்களையும், ராகுல் சர்மா 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் இந்தியா மாஸ்டர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா மாஸ்டர்ஸ் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News