ரோஹித்திற்கு பிறகு இவர்தான் கேப்டன் - பிசிசிஐ நிர்வாகி அதிரடி பேட்டி!

Updated: Fri, Jan 20 2023 22:06 IST
Image Source: Google

தற்போதைய இந்திய அணியின் மூன்று விதமான தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக இந்திய அணி., டி20 தொடரில் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளித்துவிட்டு ஹர்திக் பாண்டியாவிற்கு முக்கியத்துவம் கொடுத்தும், அவரை கேப்டனாக அறிவித்தும் அவருடைய தலைமையின் கீழ் இளம் வீரர்களை விளையாட வைத்தும் வருகிறது.

பிசிசிஐ-யின் இந்த செயல் டி20 தொடருக்கான அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை முன்னிறுத்துவது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தாலும், ரோஹித் சர்மாவிற்கு பிறகு மற்ற தொடர்களில் இந்திய அணியின் கேப்டனாக யாரை நியமிக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்து வருகிறது.

மற்ற அணிகள் ஸ்பிலிட் கேப்டன்சி என்று ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு கேப்டனை நியமித்திருக்கும் வழக்கம் இருந்தாலும், இந்திய அணி அனைத்து விதமான தொடருக்கும் ஒரே கேப்டனின் கீழ் செயல்படும் முறையை ஃபாலோ செய்து வருவதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் மத்தியில் ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் பிசிசிஐ-யின் மூத்த அதிகாரி ஒருவர் ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணி யாரை கேப்டனாக நியமிக்க போகிறது என்று பதில் அளித்துள்ளார்.

அதில்,“தற்போதைய நிலையில் எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியை ரோஹித் சர்மா தான் வழி நடத்துவார். ஆனால் அவருக்குப் பிறகு அடுத்த கேப்டன் யார் என்பதை நாங்கள் தற்பொழுது திட்டமிட துவங்கிவிட்டோம், நடக்கும்போது பார்த்துக் கொள்ளலாம் என்பது போன்று இல்லாமல் ரோஹித் சர்மாவிற்கு பிறகு யார் என்பதை கிட்டத்தட்ட தேர்வு செய்து விட்டோம். 

ஒருவேளை உலகக்கோப்பை தொடருக்கு முன் ரோஹித் சர்மா ஒரு நாள் தொடரிலிருந்து ஓய்வை அறிவித்தாலோ. அல்லது எதிர்வரும் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் தான் கேப்டன் பதவி ஏற்கவில்லை என ரோஹித் சர்மா அறிவித்தாலோ. அவருக்கு பதில் மற்றொரு கேப்டனை அறிவிக்க அனைத்து திட்டங்களும் தயாராக இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் ஹர்திக் பாண்டியா சிறந்த கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். மேலும் இளம் வீரரான ஹர்திக் பாண்டியா,ரோஹித் சர்மாவிற்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு சரியான தேர்வாக உள்ள அவரை விட வேறொரு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை. இதனால் இந்திய அணி அவருக்கு பக்கபலமாகவும் அவர் நீண்ட நாட்கள் சிறப்பாக விளையாடுவதற்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை