அது ஒரு நட்பு ரீதியான பேச்சு - முகமது சிராஜ்!

Updated: Thu, Dec 15 2022 22:49 IST
IND V BAN, 1st Test: Plan Was To Hit Stump-to-stump Line Consistently At One Area, Says Siraj (Image Source: Google)

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார். வங்கதேச வீரர்கள் தங்களது இன்னிங்ஸை நன்றாக தொடங்கினாலும் அதனை பெரிய ஸ்கோர் ஆக மாற்றாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

அதற்கு முகமது சிராஜின் நெருக்கடியான பந்துவீச்சும் காரணம். இன்றைய நாள் ஆட்டத்தில் முகமது சிராஜ் தொடக்க வீரர் இருவரையும் மற்றும் லிட்டான் தாசையும் ஆட்டம் இழக்க வைத்தார். 9 ஓவர் வீசிய முகமது சிராஜ் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். களத்தில் லிட்டன் தாசை சிராஜ் ஸ்லேஜிங் செய்தார். இது தொடர்பாகசெய்தியாளர்களிடம் பேசிய முகமது சிராஜிடம் லிட்டன் தாசை அப்படி என்ன கிண்டல் செய்தீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த சிராஜ், “அது ஒரு நட்பு ரீதியான பேச்சு. தான் நான் அவரிடம் இது ஒன்றும் டி20 போட்டி கிடையாது ,டெஸ்ட் போட்டி அதனால் நிதானமாக விளையாடு என்று அறிவுரை வழங்கினேன்” என்று கூறினார்.

இதை கேட்டதும் செய்தியாளர்கள் கலகல என்ன சிரித்தனர். இதனை தொடர்ந்து பேசிய அவர், “இந்த ஆடுகளத்தில் ஒரே மாதிரியான பந்துகளை வீச வேண்டும். நீங்கள் வித்தியாசமாக பந்து வீசுகிறேன் என்று முயற்சி செய்தால் நீங்கள் அதிக ரன்களை விட்டுக் கொடுக்க நேரிடும். எனவே நான் ஸ்டெம்பை குறி வைத்து தொடர்ந்து வீசினேன். நான்காண்டுகளுக்கு முன்பு திடீரென்று இன்ஸ்விங் பந்துகளை என்னால் வீச முடியவில்லை. அப்போது வெறும் அவுட் ஸ்விங் மட்டும்தான் எனக்கு பயனைத் தந்தது.

இதனால் நான் மிகவும் கவலை பட்டேன் ஏன் என்னால் இன் ஸ்விங் பந்துகளை வீச முடியவில்லை என்று யோசித்தேன். அதன் பிறகு ‘வோபல் சீம்’(wobble seam) என்ற யுத்தியை யுத்தியை பயன்படுத்தத் தொடங்கினேன். எப்போதுமே பந்து ஸ்டெம்பை நோக்கி வரும்போதுதான் பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். பந்து அவுட் ஸ்விங் ஆகும்போது பேட்ஸ்மேன்கள் அதனை எளிதாக எதிர்கொண்டு விடுவார்கள். இதனால்தான் இந்த யுத்தியை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பத்தில் ஆழ்த்தினேன். இந்த யுக்தியை பயன்படுத்தும் போது விக்கெட்டுகள் எனக்கு கிடைக்கிறது” என்று தெரிவித்தார்.

தற்போது வங்கதேச அணி இந்தியாவை விட 271 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. நாளைய ஆட்டத்தில் விரைவாக இரண்டு விக்கெட் வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது நாள் முழுவதும் விளையாடிவிட்டு பெரிய இலக்கை நிர்ணயத்து விட்டு வங்கதேசத்திற்கு விளையாட வாய்ப்பு தரும். இதன் மூலம் எஞ்சிய இரண்டு நாள் வைத்து இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்த இந்தியா முயற்சி செய்யும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை