இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களைச் சேர்த்திருந்தது. 

Advertisement

அதன்பின் 75 ரன்களுடன் ஸ்ரேயாஸ் ஐயரும், 50 ரன்களுடனு ரவீந்திர ஜடேஜாவும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய போட்டியில் ஜடேஜா ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

மறுமுனையில் அபாரமாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடித்து அசத்தினார். மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதமடித்த 16ஆவது இந்திய வீரர் எனும் பெருமையையும் பெற்றார். 

அதன்பின் 105 ரன்களில் ஸ்ரேயாஸ் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சஹா, அக்சர் படேல் ஆகியோரும் சோற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 38 ரன்களுடனும், உமேஷ் யாதவ் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் டிம் சௌதி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News