IND vs NZ: கோலியின் சாதனையை தகர்த்த ரோஹித் சர்மா!
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது.
இந்த தொடரை ஏற்கனவே 2 வெற்றிகளுடன் கைப்பற்றிய நிலையில் இந்திய அணி நேற்றைய போட்டியிலும் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் செய்தது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கிய காரணமாக அமைந்தது நியூசிலாந்து அணி தான். எனவே டி20 உலகக்கோப்பை முடிந்தவுடனேயே இந்தியா பழிவாங்கியுள்ளது. இதுமட்டுமல்லாமல், விராட் கோலி கேப்டன்சியில் செய்யாததை ரோஹித் சர்மா செய்துகாட்டிவிட்டதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் கோலியின் மற்றொரு சாதனையையும் ரோஹித் சர்மா தகர்த்துள்ளார். அதாவது 3ஆவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா 31 பந்துகளில் 56 ரன்கள் குவித்தார். இது அவரின் 30ஆவது அரை சதமாகும். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதம் அடித்தவர் என்ற விராட் கோலியின் சாதனையை ரோஹித் சர்மா முறியடித்துள்ளார்.
Also Read: T20 World Cup 2021
இந்தப் பட்டியலில் ரோஹித் சர்மா 30 அரை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 29 அரை சதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 25 அரை சதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இதே போல சர்வதேச டி20 போட்டிகளில் 150 சிக்சர்களை விளாசிய இரண்டாவது வீரர் என்ற மைல்கல்லையும் ரோகித் சர்மா படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.