சிக்சர் விளாசுவது பவரால் அல்ல - ஷுப்மன் கில்!

Updated: Fri, Nov 18 2022 16:41 IST
IND v NZ: Want to play less dot balls, keep ticking with singles, doubles, boundaries, says Shubman (Image Source: Google)

இந்திய அணியின் இளம் தொடக்க பேட்ஸ்மேன் ஷுப்மான் கில். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடியுள்ளார். முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் டெஸ்ட் போட்டியில் ஓரளவு இடம் கிடைக்கிறது.

தற்போது நியூசிலாந்து தொடரில் விளையாட இருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகவில்லை. ஷுப்மான் கில் நியூசிலாந்தில் நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பையில் விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். தற்போது டி20 கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகவும் ஆர்வமாக உள்ளார்.

இன்றைய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அப்போது சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாடியது குறித்து ஒளிபரப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய சுப்மான் கில், “நான் பயிற்சி செய்த சில விஷயங்களை செயல்படுத்த முடிந்தது. சிக்சர் விளாசுவது பவரால் அல்ல. அது டைமிங் ஷாட்டால்தான் சாத்தியம் என்று நினைப்பவன் நான். அதை சரியான நான் பெற்றால், என்னால் சிக்சர் விளாச முடியும் என்று எனக்குத் தெரியும்.

அதேபோல் பவுண்டரி, சிக்சரால் ரன்கள் அடிப்பதை விட ஓடி எடுக்கும் ரன்களைத்தான் நான் எதிர்பார்ப்பேன். டாட் பால் இல்லாமல் விளையாட விரும்புகிறேன். முடிந்த அளவு சிங்கிள், டபுள்ஸ் அடிக்க வேண்டும்.

2019இல் இங்குதான் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனேன். இங்கே வருவதை சிறந்ததாக உணர்கிறேன். நிச்சயமாக, நியூசிலாந்திற்கு மீண்டும் வருவதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன. நான் நியூசிலாந்திற்குச் செல்வேன் என்று எனக்குத் தெரிந்த போதெல்லாம், அது ஒரு புன்னகையைத் தருகிறது” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை