IND vs AUS, 1st ODI: ஷமி, சிராஜ் வேகத்தில் 188 ரன்களில் சுருண்டது ஆஸி!

Updated: Fri, Mar 17 2023 16:37 IST
Image Source: Google

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது . இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்து ஆஸ்திரேலியா அணியை முதலில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது .

அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினா. இதன் பிறகு மிச்சல் மார்ஷுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்மித் அணியின் ஸ்கோர் உயர சிறப்பாக ஆடினார் .

ஒரு முனையில் மிச்சல் மார்ஷ் அதிரடியாக ஆட மறுமுனையில் ஸ்டீவன் ஸ்மித் நிதானமாக அவ்வப்போது பவுண்டரிகளை அடித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இந்திய அணியினருக்கு வாய்ப்பு கொடுக்காமல் சிறப்பாக விளையாடியது இந்த ஜோடி.

இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட் இருக்கு 72 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் ஆட்டத்தின் பனிரெண்டாவது ஓவரில் இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஸ்டீவன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்து இந்தியா அணிக்கு பிரேக் த்ரூ எடுத்துக் கொடுத்தார். சிறப்பாக விளையா டிக்கொண்டிருந்த ஸ்டீவன் ஸ்மித் 12.3 ஓவரில் விக்கெட் கீப்பர் கே எல் ராகுல் இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

அதன்பின் அபர ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மிட்செல் மார்ஷ் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 65 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 81 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து வந்த மார்னஸ் லபுசாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் க்ரீன் ஆகியோர் ஷமியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தார். 

இதையடுத்து நீண்ட இடைவேளைக்குப்பின் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழக்க, மார்கஸ் ஸ்டொய்னிஸ், சீன் அபேட், ஆடம் ஸாம்பா ஆகியோர் அடுத்தடுத்து முகமது சிராஜிடம் விக்கெட்டுகளை இழந்தனர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 188 ரன்களுக்கு ஆல் அவுட்டானது 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது சிராஜ், முகமது ஷமி தலா 3 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை