இந்த தோல்வியின் மூலம் எங்களுக்கு சில திட்டங்கள் கிடைத்துள்ளன - பாட் கம்மின்ஸ்!

Updated: Sat, Sep 23 2023 10:38 IST
Image Source: Google

உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் விதமாக இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று மொஹாலியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

அதன்படி களமிறங்கிய ஆஸ்திராலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்ன் 52 ரன்களையும், ஜோஷ் இங்கிலிஸ் 45 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.  

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ருதுராஜ் கெய்க்வாட் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ருதுராஜ் 71 ரன்களிலும், ஷுப்மன் கில் 74 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, அடுத்து வந்த இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழது ஏமாற்றமளித்தனர். 

பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும் சேர்க்க, இந்திய அணி 48.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. மேலும் இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சு தாக்குதல், பேட்டிங் வரிசையை மிக நீளமாக அமைத்த காரணத்தினால், மிகவும் பலவீனமாக இருந்தது வெளிப்பட்டு விட்டது. இந்த வகையில் உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலியா அணியால் செல்ல முடியாது என்பதை ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் உணர்ந்து இருக்கும்.

தோல்விக்கு பின் பேசிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “தனிப்பட்ட முறையில் திரும்பி வந்ததிலும், இந்தியாவில் எனக்கு முதல் ஆட்டம் கிடைத்ததிலும் மகிழ்ச்சி. ஒரு சில வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். ஒரு சில வீரர்கள் நன்றாக பவுலிங் செய்தனர். ஆனால் ஒட்டுமொத்தமாக அது வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. வெளியில் காயத்தில் இருக்கும் வீரர்கள் இரண்டாவது ஆட்டத்திற்கு கிடைக்க மாட்டார்கள். 

ஒருவேளை அவர்கள் மூன்றாவது ஆட்டத்திற்கு கிடைக்கலாம். மேக்ஸ்வெல் இந்தியா வந்துவிட்டார். ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆட்டம் சிறப்பாக இருந்தது. இவர்களை எல்லாம் ஒன்றாகப் பார்ப்பது மகிழ்ச்சியானது. தற்பொழுது எங்களுக்கு உலகக் கோப்பை பெரிய போட்டிகளின் மூலம் இந்த தோல்வியால் ஒரு பார்வை கிடைத்திருக்கிறது. ஆனால் முன்கூட்டியே சிறப்பாக விளையாடி வெற்றி பெற்று விதத்தை அமைக்க வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை