இந்தியா vs ஆஸ்திரேலியா, 5ஆவது ஒருநாள் - ஆறுதல் வெற்றியை ஈட்டுமா ஆஸ்திரேலியா?

Updated: Sun, Dec 03 2023 11:08 IST
Image Source: Google

அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது இந்தியா உடன் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளயாடி வருகிறது. மூத்த வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் பிசிசிஐ வாய்ப்பளித்துள்ளது. நடந்து முடிந்துள்ள 4 போட்டிகளில், இந்திய அணி மூன்றில் வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இதில் தொடரை ஏற்கனவே கைப்பற்றிவிட்ட சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி கடைசி போட்டியிலும் வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதேநேரம், ஆறுதல் வெற்றியை பெற ஆஸ்திரேலியாவும் மல்லுக்கட்டுகிறது. இதனால், இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் வாய்ந்த இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். 

உள்ளூர் மைதானங்களில் போட்டி நடைபெறுவது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக உள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளிலும் இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ரிங்கு சிங் அதிரடியான பினிஷிங்கை தொடர்ந்து வழங்கி வருகிறார்.  முதல் 3 போட்டிகளில் ரன்களை வாரிக்கொடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள், ராய்ப்பூர் போட்டியில் சிக்கனமாக ரன்களை கொடுத்து தொடரை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தனர். 

மறுமுனையில்,  ஆஸ்திரேலிய அணி நிலைத்து நின்று ஆடக்கூடிய அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இன்றி திணற் வருகிறது.  அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் இருப்பதும், ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அணியின் பேட்டிங்கில் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேத்யூ வேட் ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறிவருகின்றனர். 

பந்துவீச்சில் தன்வீர் சங்கா, பென் துவார்ஷூயிஸ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் மற்ற வீரர்கள் ரன்கள் வாரி வழங்கிவருவது அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீதமுள்ள வீரர்களும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற முடியும் என்பதால், இன்றைய போட்டியிலாவது அவர்களது ஆட்டம் எடுபடுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

உத்தேச லெவன்:

ஆஸ்திரேலியா:  ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(கே), பென் துவார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா.

இந்தியா : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கே), ஜிதேஷ் சர்மா, ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், அவேஷ் கான், முகேஷ் குமார்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - மேத்யூ வேட், ஜோஷ் பிலிப்
    பேட்ஸ்மேன்கள்- சூர்யகுமார் யாதவ், டிராவிஸ் ஹெட் (துணை கேப்டன்), ரிங்கு சிங், ரிதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
    ஆல்ரவுண்டர் - அக்சர் படேல், ஆரோன் ஹார்டி
    பந்துவீச்சாளர்கள்- ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரவி பிஷ்னோய்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை