சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஹிட்மேன்!

Updated: Sat, Sep 24 2022 10:04 IST
IND vs AUS: Rohit becomes leading six-hitter in T20Is, surpasses Guptill (Image Source: Google)

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

போட்டி இரண்டரை மணி நேரம் தாமதமாக தொடங்கியதால் போட்டியின் ஓவரும் தலா 8ஆக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மேத்யூ வேட் 43* ரன்களும், ஆரோன் பின்ச் 31 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு விராட் கோலி, கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் விரைவாக விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், கேப்டன் ரோஹித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தின் மூலமும், கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தின் மூலம் 7.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமநிலையையும் அடைந்துள்ளது. இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 4 சிக்ஸர்கள் விளாசிய இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, இதன் மூலம் டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ரோஹித் சர்மா இந்த போட்டியில் 4 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தோர் பட்டியலில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தீலை (172) பின்னுக்குத்திள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய டாப் 5 வீரர்கள்

  • ரோஹித் சர்மா – 176 சிக்ஸர்கள்
  • மார்டின் கப்தில் – 172 சிக்ஸர்கள்
  • கிறிஸ் கெய்ல் – 124 சிக்ஸர்கள்
  • ஈயன் மோர்கன் – 120 சிக்ஸர்கள்
  • ஆரோன் பின்ச் – 119 சிக்ஸர்கள்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை