சேவாக்கின் சிக்ஸர் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் சர்மா?

Updated: Mon, Sep 16 2024 22:48 IST
Image Source: Google

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. இப்போட்டிக்கான இரு அணி வீரர்களையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்துள்ளன. மேற்கொண்டு இரு அணி வீரர்கள் தற்சமயம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடரை வென்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தனது முதல் இடத்தை வலுப்படுத்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா விரும்புகிறார். மறுபுறம், இந்த தொடரில் ரோஹித் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். அதன்படி, வங்கதேசத்திற்கு எதிரான இந்த தொடரில் விளையாடும் ரோஹித் சர்மா இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கை விஞ்சி அவர் முதலிடத்தை பிடிக்கும் வய்ப்பை பெற்றுள்ளார்.

தற்போது 37 வயதான ரோஹித் சர்மா இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 84 சிக்ஸர்களை அடித்துள்ளார், மேலும் அவர் இந்தியாவுக்காக அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள் வரிசையில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90 சிக்சர்களை அடித்து முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மா 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 78 சிக்ஸர்களை அடித்து மூன்றாம் இடத்திலும், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 69 சிக்ஸர்களை அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் நான்காவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர, ரோஹித் சர்மா இந்த தொடரில் 16 சிக்ஸர்களை அடித்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையையும் அவர் பெறுவார்.

மேலும் சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் மூவர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். அதன்படி இந்த பட்டியளில் இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 131 சிக்ஸர்களை விளாசி முதலிடத்திலும், நியூசிலாந்து முன்னாள் கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் 107 சிக்ஸர்களை விளாசி இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் 100  சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Also Read: Funding To Save Test Cricket

இது தவிர, இந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 1000 ரன்களை முடிக்க ரோஹித் இன்னும் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ரோஹித் இந்த ஆண்டு 20 போட்டிகளில் விளையாடி 3 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களுடன் 45 சராசரியுடன் 990 ரன்கள் எடுத்துள்ளார். ரோஹித் தற்போது 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45.46 சராசரியில் 4137 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் 12 சதங்கள், ஒரு இரட்டை சதம் மற்றும் 17 அரை சதங்களை அடித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை