IND vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்யுமா இந்திய அணி?
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்று வரும் டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை வென்றுள்ளது.
இந்நிலையில் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று டி20 தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. அதேசமயம் வங்கதேச அணி அடுத்தடுத்த தோல்விகளில் இருந்து மீளும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று சாதிக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் தாலைமையிலான இந்திய அணி அடுத்தடுத்த போட்டியில் அனைத்து துறையிலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியதுடன் அபார வெற்றியையும் பதிவுசெய்து அசத்தி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் அணியின் பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் மயங்க் யாதவ், ஹர்திக் பாண்டியா, நிதீஷ் குமார் ரெட்டி ஆகியோரும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து எதிரணி பேட்டர்களை அழுத்ததில் தள்ளினர்.
மறுபக்கம் பேட்டிங்கை பொறுத்தவரையில் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா இருவரும் தங்களுக்குகிடைத்த வாய்ப்பை இன்றைய ஆட்டத்தில் மேலும்சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் தீவிரம் காட்டக்கூடும். அவர்களுடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் உள்ளிட்டோரும் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட் செய்யும் பட்சத்தில் பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. அதன்படி இப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் திலக் வர்மா, ஹர்ஷித் ரானா மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோரை சேர்க்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை பிளேயிங் லெவனில் இந்த மாற்றங்கள் நிகழும் பட்சத்தில் ரியான் பராக், வருண் சக்ரவர்த்தி மற்றும் மயங்க் யாதவ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம்.
இந்தியா உத்தேச லெவன்: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ்(கே), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக்/திலக் வர்மா, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி/ ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், மயங்க் யாதவ்/ஹர்ஷித் ரானா
வங்கதேச அணி
மறுபக்கம் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் தொடரை முழுமையாக இழக்க நேரிடும். இதனால் அந்த அணி வெற்றிக்காக போராட முயற்சிக்கக்கூடும். அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் பலர் இருந்தாலும் டி 20 வடிவத்துக்கான ஆக்ரோஷ அணுகுமுறை அவர்களிடம் இல்லாதது முதலிரண்டு போட்டியில் அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்தது. மேலும் பந்துவீச்சிலும் அந்த அணியின் செயல்பாடுகள் பெரிதளவில் இல்லாதது குறையாகவே உள்ளது.
அந்த அணியில் தன்ஸித் ஹசன், லிட்டன் தாஸ், தாவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, பவ்வேஸ் ஹொசைன், ஜக்கர் அலி என நட்சத்திர வீரர்கள் பேட்டிங்கில் சோபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேசமயம் முஸ்தஃபிசூர் ரஹ்மான், தஸ்கின் அஹ்மத், ஷொரிஃபுல் இஸ்லாம், ரிஷாத் ஹொசைன் உள்ளிட்டர் வீரர்கள் பந்துவீசிலும் சிறப்பாக செயல்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
வங்கதேசம் உத்தேச லெவன்: லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), பர்வேஸ் ஹொசைன் எமன், தவ்ஹித் ஹிரிடோய், மஹ்முதுல்லா, ஜக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாஃபிசூர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்
Also Read: Funding To Save Test Cricket
IND vs BAN 2nd T20I Dream11 Team
- விக்கெட் கீப்பர் - சஞ்சு சாம்சன் (துணை கேப்டன்), லிட்டன் தாஸ்
- பேட்டர்ஸ் - சூர்யகுமார் யாதவ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, அபிஷேக் சர்மா
- ஆல்-ரவுண்டர் - ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நிதீஷ் குமார், ரிஷாத் உசேன், மெஹ்தி ஹசன் மிராஸ்
- பந்துவீச்சாளர்கள் - முஸ்தஃபிசூர் ரஹ்மான், வருண் சக்ரவர்த்தி