இங்கிலாந்து அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இந்திய அணி முதலிரண்டு போட்டிகளிலும், இங்கிலாந்து அணி மூனறாவது போட்டியிலும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்து வருகின்றனர். இதில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் நான்காவது டி20 போட்டி இன்று (ஜனவரி 31) நடைபெற்றது.

Advertisement

புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இப்போட்டிக்கான இரு அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா மீண்டும் அதிரடியான தொடக்கத்தை வழங்கினார். ஆனால் மறுமுனையில் களமிறங்கிய சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும், திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சாகிப் மஹ்மூத் வீசிய முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்தனர். 

Advertisement

இதனால் இந்திய அணி 12 ரன்களிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அபிஷேக் சர்மாவுடன் இணைந்த ரிங்கு சிங் பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இதில் இருவரும் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் 4ஆவது விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங்கும் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 30 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஷிவம் தூபே மற்றும் ஹர்திக் பாண்டியா இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளும், சிக்ஸர்களையும் விளாச இந்திய அணியின் ஸ்கோர் வேகமும் உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இருவரும் இணைந்து 6ஆவது விக்கெட்டிற்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 53 ரன்களை எடுத்த கையோடு ஹர்திக் பாண்டியா விக்கெட்டை இழந்தார்.

இருப்பினும் இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த ஷிவம் தூபே தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த ஷிவம் துபே 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 53 ரன்களைச் சேர்த்து கடைசி பந்தில் ரன் அவுட்டானார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களைக் குவித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சாகிப் மஹ்மூத் 3 விக்கெட்டுகளையும், ஜேமி ஓவர்டன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News