அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!

Updated: Sat, Feb 03 2024 13:16 IST
அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாது அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களில் ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 209 ரன்களைச் சேர்த்தார். இதில் 19 பவுண்டரி, 7 சிக்சர்களும் அடங்கும்.

இங்கிலாந்து அணி தரப்பில் சிறப்பான பாந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர் மற்றும் ரெஹான் அஹ்மத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் - ஸாக் கிரௌலி இணை வழக்கம்போல் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதன்மூலம் முதல் 10 ஓவர்களிலேயே அந்த அணி 59 ரன்களைச் சேர்த்தது. 

அதன்பின் 21 ரன்கள் எடுத்த நிலையில் பென் டக்கெட் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸாக் கிரௌலி அரைசதம் கடந்தார். இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினது விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கைப்பற்றினார். இப்போட்டியில் அஸ்வின் 4 பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸிடம் கேட்ச் கொடுத்தார்.

 

ஆனால் பந்து அவரது பேடில் பட்டு சென்றதாக அஸ்வின் நடுவரிடம் முறையிட்டு, டிஆர்எஸ் சென்றார். ஆனால் டிஆர்எஸில் பந்து முதலில் அஸ்வினின் பேட்டில் உராசியவாறு பேடில் பட்டு கீப்பரிடம் தஞ்சமடைந்தது. இதனால் ஏமாற்றமடைந்த அஸ்வின் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இந்நிலையில் ஆஸ்விஸ் ஆட்டமிழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை