பிரித்வி ஷாக்கு கிடைத்த வாய்ப்பு; இங்கிலாந்து தொடருக்கு ரெடி?

Updated: Sun, Jul 04 2021 13:47 IST
IND vs ENG: Team Wants Prithvi Shaw for Tests (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணி ஏற்கெனவே இங்கிலாந்து சென்றுவிட்டது. இதனிடையே, நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மோதியது. 

இதில் இந்தியா தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்தியாவின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில் - ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இதனையடுத்து இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலும் சுப்மன் கில் - ரோகித் சர்மா ஜோடியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சுப்மன் கில்லுக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் 6 முதல் 8 வாரங்களுக்கு விளையாட முடியாது என கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 அணிகள் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிக்கு ஷிகர் தவண் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். மேலும் ராகுல் திராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஜூலை 13 இல் நடக்கிறது. இப்போது இலங்கை சென்று இருக்கும் இந்திய அணியில் பிருத்வி ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் இருக்கும் சுப்மன் கில்லுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் இருக்கும் பிருத்வி ஷாவை இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சேர்க்க இந்திய டெஸ்ட் அணி பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே மயாங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கியிருந்தாலும், பிருத்வி ஷாவையே டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக களமிறக்க விரும்புவதாக கூறப்படுகிறது. 

பிருத்வி ஷா உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரேவில் 800 ரன்கள் குவித்துள்ளதாலும், அவர் நல்ல பார்மில் இருப்பதாகவும் அணி நிர்வாகம் பிசிசிஐ நம்புகிறது. இதனால் இலங்கை சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பிருத்வி ஷா இங்கிலாந்துக்கு புறப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை