ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா?

Updated: Wed, Jun 05 2024 09:11 IST
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: அயர்லாந்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்குமா இந்தியா? (Image Source: Cricketnmore)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று இரவு நடைபெறும் 8ஆவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள முன்னாள் சாம்பியன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை எதிர்த்து பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் மற்றும் இப்போட்டியின் ஃபேண்டெஸி லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். 

இந்திய அணி

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷப்பந்த், ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் பலமாக உள்ளனர். இதில் பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

மேலும் நடப்பு டி20 உலகக்கோப்பை தொட்ருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, அக்‌ஷர் படேல் ஆல்ரவுண்டர்களாக உள்ளதால் இவர்களில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் பும்ரா, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகத்திலும், யுஸ்வேந்திர சஹால், குல்தீப் யாதவ் அசத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் ரோஹித் சர்மாவுக்கு பெரும் சவால் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் உத்தேச லவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

அயர்லாந்து அணி

பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியைப் பொறுத்தவரையில் அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் சமீபத்தில் கூட பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியை வென்று சாதனை படைத்த உத்வேகத்துடன் உள்ளது. மேற்கொண்டு டி20 உலகக்கோப்பை தொடர்களில் இதற்கு முன் பல முன்னணி அணிகளை அப்சட் செய்த பெருமையையும் அயர்லாந்து அணி தன்வசம் வைத்துள்ளது.

அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் கேப்டன் பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் பலமாக உள்ளனர். அணியின் பந்துவீச்சில் ஜார்ஜ் டக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், பேரி மெக்கெரத்தி, கிரேக் யங், ஜோஷுவா லிட்டில் போன்ற வீரர்கள் உள்ளனர். இதனால் அயர்லாந்து அணியும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை. 

அயர்லாந்து அணியின் உத்தேச லவன்: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, மார்க் அதிர், ஜோஷுவா லிட்டில் பேரி மெக்கார்த்தி, கிரேக் யங்.

இந்தியா - அயர்லாந்து ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள்: ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன்
  • பேட்டர்ஸ்: ரோஹித் சர்மா, பால் ஸ்டிர்லிங், விராட் கோலி (கேப்டன்), ஹாரி டெக்டர்
  • ஆல்-ரவுண்டர்கள்: மார்க் அதிர், ஷிவம் துபே, கர்டிஸ் கேம்பர்
  • பந்துவீச்சாளர்கள்: ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ் (துணைக்கேப்டன்)
     
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை