இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு முன்னதாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்களைச் சேர்த்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களைச் சேர்த்தார். நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதி 5 விக்கெட்டுகளையும், கைல் ஜேமிசன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் - வில் யங் இணை அபாரமான தொடக்கத்தை வழங்கினர்.
இதில் அதிரடியாக செயல்பட்ட வில் யங் அரைசதம் கடக்க, அவரைத் தொடர்ந்து டாம் லேதமும் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.
இதனால் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விக்கெட் இழப்பின்றி 129 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் வில் யங்75 ரன்களுடனும், டாம் லேதம் 50 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.