IND vs NZ, 2nd T20I: கடைசி ஓவர் வரை இழுத்துப்பிடித்த நியூசி; போராடி வென்றது இந்தியா!

Updated: Sun, Jan 29 2023 22:33 IST
IND vs NZ, 2nd T20I: India hold their nerves to secure 1-1 in the low scoring thriller! (Image Source: Google)

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியிலும் வெற்றிபெற்று டி20 தொடரை வெல்லும் முனைப்பில் நியூசிலாந்து அணியும், இந்த போட்டியில் ஜெயித்து தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்கும் முனைப்பில் இந்திய அணியும் களமிறங்கியுள்ளன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் உம்ரான் மாலிக்கிற்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் அணியில் சேர்க்கப்பட்டார். 

அதன்படி முதலில் பேட்டிங் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் தலா 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மார்க் சாப்மேன் 14 ரன்களுக்கும், க்ளென் ஃபிலிப்ஸ் 5 ரன்களுக்கும், டேரைல் மிட்செல் 8 ரன்களுக்கும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

மைக்கேல் பிரேஸ்வெல்லும் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். கேப்டன் மிட்செல் சாண்ட்னெர் 19 ரன்கள் அடித்து நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடக்கம் முதலே நியூசிலாந்தை ரன் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்திய இந்திய பந்துவீச்சாளர்கள், அவர்களை 99 ரன்களுக்கு சுருட்டினர். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை இழந்தனர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியும் தடுமாற்றமான ஆட்டத்தையே வெளிப்படுத்தனர். இதில் ஷுப்மன் கில் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீரரான இஷான் கிஷான் 19 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் நிதான் ஆட்டத்தை தொடர்ந்த ராகுல் திரிபாதி 13 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதில் வாஷிங்டன் சுந்தர் 10 ரன்கள் எடுத்த போது எதிர்பாராத விதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவுடன் இணைந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். இதன்மூலம் இந்திய அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் போராடி வெற்றிபெற்றது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் யாதவ் 26 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 15 ரன்களையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன்செய்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை