தனது பேட்டிங் திறன் குறித்து மனம் திறந்த வாஷிங்டன் சுந்தர்!

Updated: Sat, Jan 28 2023 13:32 IST
IND vs NZ: Washington Sundar comes in support of teammates, terms loss vs Kiwis as one-off
Image Source: Google

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது.

இதில் இரு அணிகாளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில், வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத இந்த ஆடுகளத்தில் தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஆரம்பத்தில் இரண்டு விக்கட்டுகளை எடுத்து வாஷிங்டன் சுந்தர் செக் வைத்தார். ஆனாலும் கான்வோ மற்றும் டேரில் மிட்சல் இருவரும் அதிரடியாக அரை சதங்கள் விளாச நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் குவித்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு இஷான் கிஷன், ஷுப்மன் கில், ராகுல் திரிபாதி சரியான பங்களிப்பை செய்யாமல் ஏமாற்றம் அளித்தனர். அதன்பின் சூர்யகுமார் யாதவ் 40 ரன்கள் எடுக்க இறுதி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 50 ரன்கள் எடுக்க இந்திய அணி 9 விக்கட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

நேற்றைய போட்டிக்கு பின் பேசிய வாஷிங்டன் சுந்தர், "ஆமாம், வளர்ந்து வரும் நான் எப்பொழுதும் டாப் ஆர்டரில் பேட் செய்தேன் - ஓப்பன் அல்லது 3ஆவது இடத்தில் பேட்டிங் செய்தேன் - ஆனால் நான் நிறைய டி20 போட்டிகளை விளையாடத் தொடங்கியதிலிருந்து, குறிப்பாக ஐபிஎல்லில் இந்த மாற்றம் ஏற்பட்டது. வெளிப்படையாக, அதற்கு பயிற்சி தேவை. 

எந்தவொரு திறமையும், நான் உணர்கிறேன், நீங்கள் மிகவும் கடினமாக பயிற்சி செய்தால், நீங்கள் சரியான வழியில் மற்றும் ஒரு குறிப்பிட்ட வழியில் வேலை செய்தால், நீங்கள் இறுதியில் அதைப் பெறுவீர்கள், அது எனக்கும் நடந்தது. உங்களுக்குத் தெரியும், அந்த குறிப்பிட்ட திறன் தேவைப்படுவதைச் செய்வதில் நான் நிறைய மணிநேரம் செலவிட்டேன், இறுதியில் நான் அதை அடைந்தேன்" என்று தெரிவித்தார்.

வாஷிங்டனைப் பற்றி ஹர்திக் பாண்டியா கூறுகையில், "அவர் மிகவும் பெரிய பிளஸ்.  அவரைப் போல பேட்டிங் மற்றும் பந்துவீசக்கூடிய ஒருவரை நாங்கள் தேடுகிறோம். அவர் பந்துவீசுவதும், அவர் பேட்டிங் செய்யும் விதமும் எங்களுக்கு முன்னோக்கிச் செல்வதில் மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. அக்சர் இருக்கிறார், வாஷிங்டன் இருக்கிறார். இந்த இரண்டு பேரும் அவர்கள் பேட்டிங் செய்யும் முறையைத் தொடர்ந்தால், அது இந்திய அணிக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை