ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்றுவரும் போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் அணியை எதிர்த்து ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. பல்லகலேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

Advertisement

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷுப்மன் கில் - ரோஹித் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா இரண்டு பவுண்டரிகளை அடித்து செட்டில் ஆன நிலையில் மழைக்குறுக்கிட்டது. அதன்பின் தொடங்கிய ஆட்டத்தில் 11 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா, ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி 4 ரன்களை எடுத்த நிலையில் ஷாஹின் அஃப்ரிடி பந்துவீச்சில் இன்சைட் எட்ஜ் ஆகி போல்டாகினார். 

Advertisement

அதன்பின் காயத்திலிருந்து மீண்டு அணியில் இடம்பிடித்த ஸ்ரேயாஸ் ஐயரும் வழக்கம் போல் ஹாரிஸ் ராவுஃப் வீசிய பவுன்சர் பந்தில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் தட்டுத்தடுமாறி களத்தில் இருந்த ஷுப்மன் கில்லும் 32 பந்துகளில் 10 ரன்களை மட்டுமே எடுத்து ஹாரிஸ் ராவுஃப் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகினார். இதனால் இந்திய அணி 66 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

அதன்பின் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - ஹர்திக் பாண்டியா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். அதன்பின் அவ்வபோது பவுண்டரிகளை விளாசிய இருவரும் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இருவரும் தங்களது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.

பின்னர் 9 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 82 ரன்களை எடுத்திருந்த இஷான் கிஷன் ஆட்டமிழக்க, மறுபக்கம் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் 7 பவுண்டரி, ஒரு சிக்சர் என 87 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 14 ரன்களுக்கும், ஷர்துல் தாக்கூர் 3 ரன்களுக்கும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் களமிறங்கிய ஜஸ்ப்ரித் பும்ரா தனது பங்கிற்கு ஒரு சில பவுண்டரிகளை விளாச, இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷாஹின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப், நசீம் ஷா தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News