இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டெல்லியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2ஆவது டி20 போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடைபெற்று வருகிறது.

Advertisement

கட்டாக் மைதானம் சுழலுக்கு சாதகமான ஒரு பிட்ச் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சராசரி ஸ்கோரே 136 ரன்கள்தான். இந்த பிட்சில் ஒரு ஓவரில் சராசரியாக 7 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் ஓப்பனர்களாக களமிறங்கினர்.

Advertisement

முதல் ஓவரிலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ரபாடாவின் பந்துவீச்சில் ருதுராஜ் கெய்க்வாட் வெறும் ஒரு ரன் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் நிதானமாக ஆட, இஷான் கிஷன் பொறுப்புணர்ந்து அதிரடியாக விளையாடி பந்துகளை நாலாப்புறமும் சிதறவிட்டார்.

நோர்க்கியா வீசிய 4ஆவது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார் இஷான். பர்னெல் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரியை இஷான் விளாச ஸ்கோர் உயரத் துவங்கியது. ப்ரெட்டோரியஸ் வீசிய 6ஆவது ஓவரிலும் இஷான் சிக்ஸர் ஒன்றை சிதறடிக்க, பவர்பிளே முடிவில் 42-1 என்ற நிலையில் வலுவாக இருந்தது இந்திய அணி.

ஆனால் நோர்க்கியா வீசிய 7ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி விளாசிய இஷான், அதற்கு அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து 34 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்தும் 5, ஹர்திக் பாண்டியா 9 ரன்களிலும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.

அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் 40 ரன்கள் எடுத்த நிலையில் ப்ரிட்டோரியஸ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதனைத் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய அக்ஸர் படேலும் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Advertisement

இறுதியில் தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல் ஆகியோர் சில பவுண்டரிகளை அடித்து அணிக்கு உதவினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களைச் சேர்த்துள்ளது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 30 ரன்களையும், ஹர்ஷல் படேல் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News