SA vs IND: கும்ப்ளே, ஸ்ரீநாத் வரிசையில் இணைய காத்திருக்கும் ஷமி!

Updated: Mon, Jan 10 2022 16:20 IST
Image Source: Google

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.

கேப்டவுனில் நாளை தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும். இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார்.

முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளும், 2வது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளும் என மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. இதுவரை மொத்தமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 45 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இன்னும் 5 விக்கெட் வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டுவார். இதுவரை அனில் கும்ப்ளே (84), ஜவகல் ஸ்ரீநாத் (64), ஹர்பஜன் சிங் (60), அஸ்வின் (56) ஆகிய நால்வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

ஷமி இன்னும் 5 டெஸ்ட் விக்கெட் வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது இந்திய பந்துவீச்சாளர், மற்றும் 2ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை