இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் மொஹலி மைதானத்தில் தொடங்கியுள்ளது.
முதல் டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. விஹாரி 30, கோலி 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
அதன்பின் 3ஆம் நிலை வீரராகக் களமிறங்கிய விஹாரி, 93 பந்துகளில் அரை சதமெடுத்தார். அதேசமயம்100ஆவது டெஸ்டில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்களில் எதிர்பாராதவிதமாக எம்புல்தெனியா பந்துவீச்சில் போல்ட்டாகி ஏமாற்றமளித்தார்.
அதன்பின் 58 ரன்களுடன் விளையாடிய வந்த ஹனுமா விஹாரி, விஷ்வா ஃபெர்னாண்டோ பந்துவீச்சில் போல்டாகினார்.
இதனால் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களைச் சேர்த்துள்ளது. இந்திய அணி தரப்பில் ரிஷப் பந்த் 12 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் ஐயர் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இலங்கை அணி தரப்பில் லசித் எம்புல்தெனியா 2 விக்கெட்டுகளையும், விஷ்வா ஃபெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா ஓரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.