IND vs SL, 2nd Test: மழையால் கைவிடப்பட்ட மூன்றாம் நாள் ஆட்டம்!
இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கியது. ஈரப்பதம் காரணமாக தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.
இதையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஸகிர் ஹசன் மற்றும் ஷத்மான் இஸ்லாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் நிதான தொடக்கத்தை கொடுத்த நிலையில், 24 பந்துகளை எதிர்கொண்ட ஸகிர் ஹசன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 24 ரன்களை எடுத்திருந்த ஷத்மான் இஸ்லாமும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்த பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் நஹ்முல் ஹொசைன் சாண்டோவும் 31 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்களை எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் முதல்நாள் ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. வங்கதேச அணி தரப்பில் மொமினுல் 40 ரன்களுடனும், முஷ்ஃபிக்கூர் ரஹீம் 6 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதனையடுத்து இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று தொடங்க இருந்த நிலையில், தொடர் மழை காரணமாக இப்போட்டியின்ன் இரண்டாம் நாள் ஆட்டமானது முழுவதுமாக கைவிடப்பட்டது. இதினால் இப்போட்டியை காண இருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்த்து இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்க இருந்த நிலையில், மீண்டும் மழை பெய்த காரணமாக மைதானத்தில் தண்ணீர் தேங்கி இருந்தது.
இதனால் இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மேற்கொண்டு மைதான ஊழியர்கள் களத்தில் உள்ள ஈரப்பதத்தை நீக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையிலும், மைதானத்தின் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்ற காரணத்தால், இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டமும் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இப்போட்டியை காண இருந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே இரண்டு நாள் ஆட்டம் தொடர்ச்சியாக கைவிடப்பட்டுள்ளை நிலையில், எஞ்சியுள்ள இரண்டு நாள் ஆட்டமாவது நடைபெருமா என்பது சந்தேகமாகியுள்ளது. ஒருவேளை அடுத்த இரண்டு நாள் ஆட்டமும் மழையால் கைவிடப்படும் பட்சத்தில் இப்போட்டியானது டிராவில் முடிவடையும் என்பது குறிப்பிடதக்கது. இப்போட்டியானது முழுவதுமாக கைவிடப்படும் பட்சத்தில் இந்திய அணி தொடரை வெல்லும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா பிளேயிங் லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா(கேட்ச்), ஷுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பந்த்(வ), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
Also Read: Funding To Save Test Cricket
வங்கதேசம் பிளேயிங் லெவன்: ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கே), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், கலீத் அகமது.