இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் தசுன் ஷனாகா 74 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் வழக்கம் போல தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
அவருக்கு துணைக்காக விளையாடிய தீபக் ஹூடா 21 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஆனால் பின்னர் வந்த ஜடேஜா, ஸ்ரேயாஸுடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் இந்திய அணி 16.5 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது.
இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 73 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.