IND vs SL: டெஸ்ட், டி20 தொடருக்கான இலங்கை அறிவிப்பு!

Updated: Mon, Feb 21 2022 15:14 IST
Image Source: Google

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அதிலும் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ரோஹித் சர்மா தலைமைதாங்கவுள்ளார். அதேபோல் ரவீந்திர ஜடேஜாவும் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தசுன் ஷானகா தலைமையில் களமிறங்கும் இலங்கை அணியில் ரமேஷ் மெண்டிஸ், நுவன் துஷாரா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆகியோர் காயம் காரணமாக இத்தொடரில் இடம்பிடிக்கவில்லை.

இலங்கை: தசுன் ஷனக (கே), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக, கமில் மிஷார, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, மஹீஸ் தீக்ஷன, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, அஷியன் டேனியல்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை