IND vs SL: வலைபயிற்சியில் தவான் & கோ!

Updated: Sat, Jul 03 2021 13:37 IST
Ind vs SL: Good for the boys to come out of quarantine and get moving, says Dravid
Image Source: Google

இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்காக ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த 29ஆம் தேதி தனி விமானம் மூலம் இலங்கை சென்றடைந்து, அங்கு தனிமைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 3 நாள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகு, இந்திய அணி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் சஹால், இஷான் போரல், குர்னால் பாண்டியா, ஹாா்திக் பாண்டியா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ஆகியோா் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனா்.

முன்னிலை வீரா்கள் இங்கிலாந்துடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ள நிலையில், இலங்கை சுற்றுப் பயணத்துக்கு இரண்டாம் நிலை இந்திய அணியே சென்றுள்ளது. வரும் அக்டோபா்-நவம்பா் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி தொடா் இதுவாகும். 

 

உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு தோ்வு பெற பிரித்வி ஷா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், சூா்யகுமாா் யாதவ் ஆகியோருக்கு இத்தொடா் ஒரு நல் வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை