IND vs SL: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம்!

Updated: Sat, Feb 19 2022 16:37 IST
IND vs SL: Indian Squads For T20I & Tests Announced; Rohit Named Test Captain While Rahane & Pujara (Image Source: Google)

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பிசிசிஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. 

இந்நிலையில் தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் அதிகரித்திருந்தது. மேலும் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதால், அவரே டெஸ்ட் அணிக்கும் கேப்டனாக செயல்படுவார் என்ற கருத்துகள் வெளிவந்தன.

இந்நிலையில் இலங்கை அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 

இதன்மூலம் இந்திய அணியின் மூன்று வடிவிலான அணிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் இத்தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரர்களான அஜிங்கியா ரஹானே, சட்டேஷ்வர் புஜாரா, இஷாந்த் சர்மா, விருத்திமான் சஹா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதேபோல் அறிமுக வீரர் பிரியங்க் பாஞ்சல், சவுரப் குமார் ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணி: ரோஹித் சர்மா (கே), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ் பாரத், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை