IND vs SL, 1st Test: இலங்கை அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!

Updated: Thu, Mar 03 2022 16:51 IST
IND vs SL: Kusal Mendis Ruled Out Of 1st Test Due To Injury, Dushmantha Chameera Rested; Confirms Ca (Image Source: Google)

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் மொஹலி மைதானத்தில் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணிகளும் சில தினங்களுக்கு முன்னதாகவே மொஹாலி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையில் இலங்கை அணியில் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து குசால் மெண்டிஸ் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்லா விக்கெட் கீப்பர் பணியைச் செய்வார். 

அதேபோல் வேகப்பந்துவீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இது முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை