இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என இந்திய அணி  முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது.

Advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்யது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 183 ரன்களை குவித்து. 

Advertisement

இதில் அதிகபட்சமாக பதும் நிஷங்கா 75 ரன்களையும், தசுன் ஷனகா 47 ரன்களையும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இப்போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சைலண்டாக ஒரு சாதனை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளார். அதவாது இப்போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, தினஷ் சண்டிமலின் கேட்சைப் பிடித்தார். 

இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 50ஆவது கேட்சைப் பிடித்தார் ரோஹித் சர்மா. இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஃபீல்டராக 50 கேட்சுகளைப் பிடித்த முதல் வீரர் எனும் சாதனையை ரோஹித் சர்மா படைத்தார்.

 

Advertisement

அவருக்கு அடுத்ததாக இப்பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 43 கேட்சுகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News