IND vs SL: இந்திய அணியின் கேப்டனாக தவான் நியமனம்; அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு!
இந்திய அணி அடுத்த மாதம்(ஜூலை) இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
விராட் கோலி தலைமையிலான ரோஹித் சர்மா, ரஹானே, ரிஷப் பண்ட், அஷ்வின், ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகிய முக்கிய வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது.
இதன் காரணமாக ஷிகர் தவான், ஹர்திக் பாண்டிய, பிரித்வி ஷா உள்ளிட்ட இந்திய ஏ அணி வீரர்கள் இலங்கை செல்லவுள்ளனர். இந்த அணிக்கு ஷிகர் தவான் அல்லது ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தது.
அதன்படி இன்று இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாடும் 20 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
இதில் இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும், துணைக்கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேவ்தவ் படிகல், சேதன் சக்கரியா, நிதீஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம், வருண் சக்கரவர்த்தி, ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய ஒருநாள் & டி20 அணி: ஷிகர் தவான் (கே), புவனேஷ்வர் குமார், பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மனீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, நிதீஷ் ராணா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சஹால், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கௌதம், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேதன் சக்கரியா.