ஷனகா இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார் - வாசிம் ஜாஃபர்!

Updated: Wed, Jan 11 2023 22:07 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இந்நிலையில், இலங்கை அணி கேப்டன் ஷனக்கா இந்திய அணிக்கு பெரிய தலைவலியாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய வாசிம் ஜாஃபர், “இலங்கை கேப்டன் ஷனாகாவை எப்படி ஆட்டம் இழக்க வைக்க வேண்டும்.  ஏனென்றால் நீண்ட காலமாகவே ஒரு தலைவலியாகவே ஷனாகா இருந்து வருகிறார். இந்தியாவுக்கு எதிராக அவர் சிறப்பாக விளையாடி வருகிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட்டும் பிரமிக்கும் வகையில் இருக்கிறது. இந்தியா வெற்றி பெற்றாலும் ஷனாகா அதிரடி சதத்தை அடித்திருக்கிறார். ஷனாகாவை எதிர்கொள்ள இந்திய பந்துவீச்சாளர்களால் முடியவில்லை.

எனவே ஷனாகாவை எப்படி அமைதியாக கட்டுப்படுத்தும் என்று இந்திய வீரர்கள் யோசிக்க வேண்டும். ஷனாகாவை எப்படி ஆட்டம் இழக்க வைப்பது என்று ஒரு திட்டத்தை இந்திய வீரர்கள் தயாரிக்க வேண்டும். இலங்கையை காட்டிலும் இந்திய அணியிடமே கூடுதலாக பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். என்னை பொருத்தவரை ஷனாகா இலங்கை அணியின் நம்பர் ஐந்தாவது வீரராக பேட்டிங் வரிசையில் களமிறங்க வேண்டும்.

ஏனென்றால் பேட்ஸ்மேனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட அப்போதுதான் அவருக்கு நேரம் கிடைக்கும். தற்போது ஆறாவது இடத்தில் ஷனாகா பேட்டிங் வரிசையில் விளையாடுகிறார். இதன் மூலம் அவர் பேட்டிங் தெரியாத பந்துவீச்சாளர்களுடன் தான் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஆட்டம் ஏற்கனவே தோல்வி நோக்கி சென்று கொண்டிருக்கும்.

இதனால் எந்த பயனும் இல்லை. முதல் போட்டியில் கூட 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் ஷனாகா அமைத்தாலும் அதில் அவருடைய பங்கு தான் அதிகமாக இருந்தது. எனவே பேட்டிங் வரிசையில் முன்னேறி விளையாடினால் அவருடைய இந்த பேட்டிங் இலங்கை அணிக்கு நிச்சயமாக உதவும். இதேபோன்று கொல்கத்தா ஒருநாள் போட்டியில் இந்திய அணியே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை