IND vs WI, 1st T20I: தொடர் வெற்றியை தக்கவைக்குமா இந்தியா?

Updated: Wed, Feb 16 2022 11:23 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை இந்திய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது. 

இந்நிலையில் இரு அணிகள் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணி அளவில் நடைபெறுகிறது.

இந்திய அணியில் கே.எல்.ராகுல், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளதால் ருதுராஜ்கெய்வாட், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத்தொடரிலும் விராட் கோலி நெருக்கடியுடனே களமிறங்குகிறார். ஒருநாள் போட்டித் தொடரில் அவர், முறையே 8, 18 மற்றும் 0 ரன்களே எடுத்தார். இதனால் டி 20 தொடரில் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் விராட் கோலி உள்ளார்.

கே.எல்.ராகுல் இல்லாததால் ரோஹித் சர்மாவுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக களமிறங்கக்கூடும். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலக் கோப்பையை கருத்தில் கொண்டு நடுவரிசையில் ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரது செயல்திறனும் இந்தத் தொடரில் கவனிக்கப்படக்கூடிய விஷயமாக இருக்கும். பின்கள வரிசையில் தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் பலம் சேர்க்கக்கூடும்.

பந்து வீச்சில் தீபக் சஹர், ஷர்துல் தாக்கூர், யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் கூட்டணி  வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் தரக்கூடும். அதேவேளையில் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர்குமார் இழந்த பார்மை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். 

இளம் வீரர்கள் முகமது சிராஜ், அவேஷ் கான், ஹர்ஷால் படேல், ரவி பிஷ்னோய் ஆகியோர் அணியில் இருந்தாப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் அணி டி 20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தைக் வெளிப்படுத்தக் கூடியது. சமீபத்தில் அந்த அணி சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை கைப்பற்றியிருந்தது. அதே செயல்திறனை மீண்டும் வெளிப்படுத்துவதில் அந்த அணி தீவிரம் காட்டக்கூடும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை