ரோஹித்தின் துணிச்சலான முடிவே வெற்றி காரணம் - தினேஷ் கார்த்திக்

Updated: Thu, Feb 10 2022 16:33 IST
 IND vs WI: Dinesh Karthik Mentions Rohit Sharma’s Brave Move That Changed The Match Against West In
Image Source: Google

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது. 

ரோஹித் சர்மா முழு நேர கேப்டனான பிறகு அவரது தலைமையில் இந்திய அணி ஜெயிக்கும் முதல் ஒருநாள் தொடர் இதுதான். ரோஹித் சர்மா சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. ஐபிஎல்லில்  5 முறை மும்பை இந்தியன்ஸுக்கு கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, இந்திய அணியை வழிநடத்த கிடைத்த அனைத்து வாய்ப்புகளிலும் அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தனது கேப்டன்சி திறனை நிரூபித்தவர். 

ரோஹித் சர்மாவின் களவியூகங்கள், ஃபீல்டிங் செட்டப், வீரர்களை கையாளும் விதம், சாமர்த்தியமான முடிவுகள் ஆகியவைதான் அவரது தலைமையிலான அணி வெற்றிகளை பெற காரணம். அந்தவகையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் எடுத்த துணிச்சலான முடிவை புகழ்ந்து பேசியுள்ளார் தினேஷ் கார்த்திக். 

இதுகுறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், “45ஆவது ஓவரில் சுந்தரை பந்துவீச அழைத்த ரோஹித்தின் முடிவை நான் வெகுவாக ரசித்தேன். அது துணிச்சலான முடிவு. அடித்து ஆடக்கூடிய வலது கை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தபோது, ஆஃப் ஸ்பின்னரான சுந்தரை ரோஹித் சர்மா பந்துவீச அழைத்தது சுவாரஸ்யமான முடிவு. 

சுந்தர் அழுத்தமான சூழல்களை ரசித்து எதிர்கொள்வார். அந்த மாதிரி சூழலில் பந்துவீச திறமை தேவை. அப்போதுதான் கேப்டனுக்கும் பவுலருக்கும் இடையேயான நல்லுறவு உருவாகிறது” என்று புகழாரம் சூட்டினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை