இந்தியா, இங்கிலாந்து இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்திய அணி பேட்டர் ஸ்ரேயஸ் ஐயர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக படுமோசமாக திணறினார். பௌலர் பவுன்சர்தான் வீசப் போகிறார் என்பதை தெரிந்தும், அதற்கேற்றாற்போல் கால்களை நகர்த்தி நின்றும் ஷ்ரேயஸ் ஐயரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. ஸ்பின்னர்களுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

Advertisement

இதனால் இவருக்கு இனி தொடர்ந்து வாய்ப்பு வழங்க கூடாது. மாற்று வீரரை களமிறக்குவதுதான் நல்லது என பலர் கோரிக்கை விடுக்க ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்படவில்லை. ஓரங்கட்டப்பட்டார். இதனால், இனி இவருக்கு வாய்ப்பு கிடைக்காது எனக் கருதப்பட்ட நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஷ்ரேயஸ் ஐயருக்கு இடம் கிடைத்தது.

Advertisement

வெஸ்ட் இண்டீஸ் அணியில் பௌலர்கள் சிறப்பான முறையில் பவுன்சர்களை வீசுவார்கள் என்பதால், ஷ்ரேயஸ் ஐயர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் முதல் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் களமிறக்கப்பட்டார். மிடில் ஓவர்களின்போது களமிறங்கிய அவருக்கு எதிர்பார்த்தபடியே பௌலர்கள் தொடர்ந்து ஷார்ட் பால்களை வீசி மிரட்டினார்கள். 

வழக்கம்போல ஸ்ரேயஸ் ஐயரும் இதனை எதிர்கொள்ள திணறினார். அவர் களமிறங்கிய சமயம் மிடில் ஓவர்கள் என்பதால், அப்போது ஸ்பின்னர்கள்தான் அதிகமுறை பந்துவீசும் நிலை இருந்ததது. ஸ்ரேயஸ் ஐயர் ஸ்பின்னர்களுக்கு எதிராக வியக்கவைக்கும் வகையில் விளையாடக் கூடியவர் என்பதால், ஸ்பின்னரைகளை விரட்டிவிரட்டி அடித்தார்.

இதனால், ஸ்கோரும் கிடுகிடுவென உயர்ந்தது. ஸ்ரேயஸ் ஐயரும் அரை சதம் கடந்து அசத்தினார். பவுன்சர் வீக்னஸ் இருந்தும், மிடில் ஓவர்கள் என்பதால் ஸ்ரேயஸ் ஐயர் தப்பித்தார். இதே ஓபனர்கள் தவன், கில் இருவரில் ஒருவர் முன்கூட்டியே ஆட்டமிழந்திருந்தால், ஸ்ரேயஸ் ஐயர் அதிகமுறை வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருந்திருக்கும். வழக்கம்போல பவுன்சருக்கு எதிராக சொதப்பி, விரைவில் ஆட்டமிழந்திருக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்நிலையில் முதல் போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற மீட்டிங்கில், இணையம் வழியாக கலந்துகொண்ட பிசிசிஐ நிர்வாகிகள், ஸ்ரேயஸ் ஐயர் இப்போட்டியில் பவுன்சருக்கு எதிராக திணறியது குறித்து சுட்டிக்காட்டியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த இரண்டு போட்டிகளிலும் இதே நிலைமை நீடித்தால் அடுத்து உள்ளூர் தொடர்களில் விளையாடி தனது திறமையை நிரூபித்தால் மட்டுமே, மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைக்கும் என அதிரடியாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதனால், அடுத்த இரண்டு போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயர் எப்படி செயல்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டாவது போட்டி இன்று, இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு தொடங்குகிறது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News