India Women vs New Zealand Women Dream11 Prediction, T20 World Cup 2024: ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கிவுள்ளது.

Advertisement

அதன்படி இத்தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. மேலும் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது துபாயில் உள்ள துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. 

Advertisement

IND W vs NZ W World Cup Match: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs  நியூசிலாந்து மகளிர்
  • இடம் - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம், துபாய்
  • நேரம் - அக்.04 இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)

IND W vs NZ W T20I Pitch Report

இந்திய மகளிர் vs  நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இப்போட்டி போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு மொத்தம் 97 டி20 போட்டிகள் நடந்துள்ளன, இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 45 முறையும், சேஸிங் செய்த அணி 51 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. மேற்கொண்டு இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 141 ரன்களாக உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக 212 ரன்கள் இருப்பதால், நிச்சயம் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

IND W vs NZ W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 13
  • இந்திய மகளிர் அணி - 04
  • நியூசிலாந்து மகளிர் அணி - 09
  • முடிவில்லை - 00
Advertisement

IND W vs NZ W T20I: Live Streaming Details

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் இந்திய ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டுக்களிக்கலாம். அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் இத்தொடரை டிஸ்னி பிளர் ஹாட் ஸ்டாரில் நேரலையில் காணலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

India Women vs New Zealand Women Probable Playing XI

Advertisement

இந்திய மகளிர் அணி: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, ஸ்ரேயங்கா பாட்டீல், பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா தாக்கூர், ஆஷா ஷோபனா.

நியூசிலாந்து மகளிர் அணி: சுஸி பேட்ஸ், அமெலியா கெர், சோஃபி டிவைன் (கே), ப்ரூக் ஹாலிடே, மேடி கிரீன், இசபெல்லா கேஸ், ஃபிரான் ஜோனாஸ், லீ காஸ்பெரெக், ஜெஸ் கெர், மோலி பென்ஃபோல்ட், ரோஸ்மேரி மேர்.

IND W vs NZ W T20I Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிச்சா கோஷ்
  • பேட்டர்ஸ் - சுஸி பேட்ஸ், ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - சோஃபி டிவைன் (துணைக்கேப்டன்), தீப்தி சர்மா, அமெலியா கெர், பூஜா வஸ்த்ரேகர்
  • பந்துவீச்சாளர்கள் - லே காஸ்பரேக், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்.
Advertisement

IND W vs NZ W T20I Dream11 Prediction, IND W vs NZ W Dream11 Team, Fantasy  Cricket Tips, IND W vs NZ W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs New Zealand Women

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News