இங்கிலாந்து லையன்ஸ் vs இந்தியா ஏ - அணிகள் மற்றும் நேரலை விவரங்கள்!

Updated: Thu, May 29 2025 13:33 IST
Image Source: Google

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லையன்ஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. அதன்பாடி இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லையன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி மே 30 முதல் ஜூன் 2ஆம் தேதி வரையிலும், இரண்டாவது போட்டி ஜூன் 6 முதல் 9ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலன இந்திய ஏ அணியும், ஜேம்ஸ் ரீவ் தலைமையிலான இங்கிலாந்து லையன்ஸ் அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இத்தொடருக்கான போட்டி அட்டவணை, நேரலை விவரங்கள், அணிகளின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இப்பதிவில் பார்ப்போம். 

நேரலை விவரம்

இந்தியா ஏ-இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் (ECB) இணையதளம் மற்றும் செயலியில் ரசிகர்கள் நேரலையில் பார்க்கலாம். இருப்பினும், இந்தியாவில் இப்போட்டியை ரசிகர்களால் நேரலையில் காண முடியாது.

இந்தியா ஏ-இங்கிலாந்து லயன்ஸ் அணிகள்

இங்கிலாந்து லையன்ஸ்: ஜேம்ஸ் ரெவ் (கேப்டன்), ஃபர்ஹான் அகமது, ரெஹான் அகமது, சோனி பேக்கர், ஜோர்டான் காக்ஸ், ராக்கி பிளின்டாஃப், எமிலியோ கே, டாம் ஹைன்ஸ், ஜார்ஜ் ஹில், ஜோஷ் ஹல், எடி ஜாக், பென் மெக்கின்னி, டான் மௌஸ்லி, அஜீத் சிங் டேல், கிறிஸ் வோக்ஸ்.

Also Read: LIVE Cricket Score

இந்திய ஏ அணி: அபிமன்யு ஈஸ்வரன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், துருவ் ஜூரல், நிதிஷ் குமார் ரெட்டி, ஷர்துல் தாக்கூர், இஷான் கிஷன், மானவ் சுதர், தனுஷ் கோட்டியன், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், ஹர்ஷித் ராணா, அன்ஷுல் கம்போஜ், கலீல் அகமது, ருதுராஜ் கெய்க்வாட், சர்ஃபராஸ் கான், துஷார் தேஷ்பாண்டே, ஹர்ஷ் துபே. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை