இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் - ஈயன் மோர்கன்!
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி உலக கோப்பைத் தொடர் ஆரம்பிக்கப்பட்டு 46 ஆண்டுகளுக்கு பிறகு தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணம் இங்கிலாந்து அணியின் நட்சத்திர கேப்டன் ஈயன் மார்கனின் தலைமை பண்புதான். அவர்தான் எதிர்காலத்தை முன்பே கணித்து இங்கிலாந்து அணியை பலம் வாய்ந்த அதிரடி வீரர்கள் நிறைந்த அணியாக மாற்றினார்.
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை குறித்தும் அவர் சரியாக கனித்திருக்கிறார். ஈயன் மார்கனிடம் உலகக்கோப்பை அரையிறுதி சற்றுக்கு எந்த அணி வரும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயன் மார்கன், “உலகக்கோப்பை தொடர் முடியும் தருவாயில் இங்கிலாந்து அணி கண்டிப்பாக தகுதி பெற்றிருக்கும். இந்தியாவும் அரையிறுதி வரை வந்திருப்பார்கள். அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை. ஆனால் இவர்களை தவிர உலகக்கோப்பையை வெல்லப்போவது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு அணிகள் தான்.
ஏன் என்றால் இவர்கள் இருவருமே நல்ல பலம் வாய்ந்த அணியாக இருக்கிறார்கள். இந்த தொடரில் இறுதிப் போட்டி வரை வருவதற்கு இவருக்கு தகுதி இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளிடம் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். வேகப்பந்துவீச்சு, சுழற் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து துறைகளிலும் இரு அணிகளும் கைதேர்ந்து இருக்கிறார்கள்.நான் அதற்காக இந்திய அணியை குறித்து சாதாரணமாக எண்ணிவிடவில்லை. அவர்களுக்கும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
தோனி 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் சிக்ஸர் அடித்தது தான் இந்திய அணி ரசிகர்களுக்கு மேஜிக் தருணமாக இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது நிச்சயம் சாதகமானது தான். விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற வீரர்களின் அனுபவம் நிச்சயம் இந்திய அணிக்கு கைகொடுக்கும். இந்த உலகக்கோப்பை தொடர் மிகச் சிறந்த தொடர்களில் ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அந்த தொடரை நான் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.