உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த ஷிகர் தவான்!

Updated: Mon, Aug 21 2023 13:12 IST
உலகக்கோப்பை 2023: தனது கனவு அணியின் முதல் 5 வீரர்களை அறிவித்த ஷிகர் தவான்! (Image Source: Google)

நடப்பாண்டிற்கான ஐசிசியின் ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தமாக 48 ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது.  அதன்படி அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் வைத்து நடைபெற இருக்கிறது .

இத்தொடரின் முதல் போட்டியில் துவக்க போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அஹ்மதாபாத்திலுள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மோதவுள்ளன. மேலும்,  உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் போட்டி, உலகக்கோப்பை இறுதிப் போட்டி ஆகிய மூன்று போட்டிகளும் இதே மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான கால அளவே உள்ள நிலையில் தற்போதைய உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? எந்தெந்த அணிகள் உலக கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெறும் என்பது போன்ற கருத்துக்கணிப்புகளை  முன்னாள் வீரர்களும் துவங்கி விட்டனர். 

இந்நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் வெளிப்படுத்தி உள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென் ஆப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆஃப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அவர் தேர்வு செய்ததில், முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். அதன்பின் 2ஆவது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். 3ஆவது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார்.

அவரது பட்டியளில் 4ஆவது வீரராக ஆஃப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கானையும், ஐந்தாவது வீரராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் ஷிகர் தவான் தேர்வு செய்துள்ள இந்த அணியானது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை