உலகக்கோப்பையை வெல்ல இந்திய அணி இதனை செய்ய வேண்டும் - சௌரவ் கங்குலி அறிவுரை!

Updated: Sun, Jan 29 2023 14:26 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் 15ஆவது தொகுப்பு வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற உள்ளது இதற்காக இந்திய அணி தீவிரமாக பல திட்டங்களை வகுத்து வருகிறது குறிப்பாக இந்திய அணியில் பெரிதளவில் மாற்றங்கள் செய்யாமல் குறிப்பிட்ட 20 வீரர்களை தேர்வு செய்து ஒருநாள் உலகக்கோப்பை வரை அவர்களை முழுக்க முழுக்க பயன்படுத்தி வீரர்கள் மத்தியில் கூடுதல் நம்பிக்கையை வளர்க்கலாம் என முடிவு செய்திருக்கிறது.

சில சீனியர் வீரர்களுக்கு டி20 தொடர்களில் இருந்து ஓய்வும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களது பணிச்சுமை இதன் மூலம் குறையலாம். ஒருநாள் போட்டியில் கூடுதல் கவனத்துடனும் இருக்கலாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் சீனியர் வீரர்கள் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் குறைகிறது. இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பை பற்றிய அறிவுரைகளை ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவினருக்கு கூறியுள்ளார் சவுரவ் கங்குலி. 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியா போன்ற அணி எப்போதும் பலவீனமான அணியாக இருக்க முடியாது. ஏனெனில் பல திறமையான வீரர்கள் இருக்கின்றனர். திறமையான வீரர்கள் பாதி பேருக்கு இந்திய அணியில் இடம் கிடைப்பதே கடினமாக இருக்கிறது. இப்படிப்பட்ட இந்திய அணி எந்த வகையில் பலவீனமாக இருக்க முடியும்.

ரோஹித் சர்மா, ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழுவிற்கு வேண்டுகோள். ஒருநாள் உலகக்கோப்பை வரை ஒரே அணியை பயன்படுத்த வேண்டும். டி20 போட்டிகளில் சில மொமென்ட்கள் கிடைத்தால் ஆட்டத்தை மாற்றி விடலாம். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அப்படி இருந்து விட முடியாது. பொறுமை அவசியம், அணி வீரர்கள் மத்தியில் புரிதல் அவசியம், குறிப்பாக பார்ட்னர்ஷிப் அவசியம். இதனைக் கருத்தில் கொண்டு ஒரே அணியாக பயணிக்க வேண்டும்.

ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, முஹம்மது சமி, ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் காயத்தில் இருந்து விரைவில் குணமடைந்து இந்திய அணிக்கு திரும்பவிருக்கும் ஜடேஜா ஆகிய எட்டு பேரின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றே தெரிகிறது. இவர்கள் இருக்கும் அணி எப்படி பலவீனமானதாக இருக்க முடியும். இப்படிப்பட்ட வீரர்கள் நிதானத்துடனும் விளையாடுவர். ஆக்ரோஷத்துடனும் விளையாடுவர்.

இந்திய அணி வருகிற உலக கோப்பையில் வழக்கமாக இருக்கும் அணுகுமுறையை மாற்றி, சற்று ஆக்ரோஷமான அணுகுமுறையில் இறங்க வேண்டும். சமகால கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர்களை அச்சுறுத்துவதற்கு இதுதான் உதவுகிறது. கோப்பையை வெல்கிறோம் அல்லது தோற்கிறோம் என்பதை பற்றி கவலை கொள்ளாமல், ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இதற்கு முன் நடந்த போட்டிகளில் மோசமாக செயல்பட்டிருந்தாலும் அதை மனதில் கொள்ளாமல் ஒவ்வொரு போட்டியிலும் அறிமுகப் போட்டி என்று கருதி களமிறங்க வேண்டும்.” என அறிவுறுத்தினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை