WTC : இரண்டு புள்ளிகளை இழந்த இந்தியா - இங்கிலாந்து!

Updated: Wed, Aug 11 2021 14:08 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் மழையால் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த நிலையில், அது பறிபோனது. இதனால் இந்த ஆட்டத்துக்கான புள்ளியை இரு அணிகளும் சமமாக (4-4) பகிா்ந்துகொண்டன. 

இந்நிலையில் முதல் டெஸ்டில் இரு அணிகளும் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இரு அணிகளும் முதல் டெஸ்டில் பெற்ற 4 புள்ளிகளில் இருந்து தலா 2 புள்ளிகளை ஐசிசி நீக்கியுள்ளது. இதனால் தற்போது இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் 2ஆவது டெஸ்டில் நாளை விளையாடவுள்ளன. இதுமட்டுமில்லாமல் குறிப்பிட்ட நேரத்தில் குறைவான ஓவர்களை வீசியதற்காக இரு அணிகளுக்கும் ஆட்ட ஊதியத்திலிருந்தும் 40% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

ஆட்ட ஊதிய அபராதம் என்பது இரு அணிகளுக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படாது. ஆட்டம் டிரா ஆனதால் இரு அணிகளுக்கும் தலா 4 புள்ளிகள் மட்டுமே முதல் டெஸ்டிலிருந்து கிடைத்தன. ஆனால் தற்போது அதிலிருந்தும் 2 புள்ளிகளை ஐசிசி திரும்ப பெற்றுள்ளது. 

இதனால் பறிபோன 2 புள்ளிகள் கடைசிக்கட்டத்தில் சிக்கலை ஏற்படுத்துமா என்கிற கவலை இரு அணி ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த முறை ஆஸ்திரேலிய அணி இதுபோன்ற ஒரு சூழலை எதிர்கொண்டு அதனால் பெரிய இழப்பைச் சந்தித்தது. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்டில் குறைவான ஓவர்களை வீசியதால் 4 அபராதப் புள்ளிகள் ஆஸி. அணிக்கு அளிக்கப்பட்டன. கடைசியில் இதன் காரணமாக ஆஸி. அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனது. குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை