இந்திய அணி டெஸ்டில் மட்டும் தான்; ஒருநாளில் அல்ல - மைக்கேல் வாஹன்

Updated: Tue, Sep 07 2021 16:42 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான லண்டன் ஓவல் டெஸ்டை இந்திய அணி வென்று, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. 4ஆவது டெஸ்டை வெற்றி பெற இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி கடைசி நாளில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது. 

இந்நிலையில் ஓவல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணியைப் பாராட்டி பிசிசிஐ தலைவர் கங்குலி தனது ட்விட்டர் பதில் “அருமையான ஆட்டம். திறமை தான் இரு அணிகளையும் வேறுபடுத்தியுள்ளது. அழுத்தமான தருணங்களில் நன்கு விளையாடியது தான் முக்கியமான வேறுபாடாக இருந்தது. (தரத்தில்) மற்ற நாடுகளை விடவும் இந்திய கிரிக்கெட் முன்னேறிச் சென்றுள்ளது” என்று தெரிவித்திருந்தர்.

Also Read: மதியம் பாகிஸ்தான் அணி அறிவிப்பு; மாலை பயிற்சியாளர்கள் ராஜினாமா - தொடரும் குழப்பத்தில் பிசிபி!

இதற்கு இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும்தான் அப்படி உள்ளது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அல்ல என்றார். சமீபகாலமாக இந்திய அணி ஐசிசி போட்டிகள் எதையும் வெல்லாததால் இதுபோன்ற ஒரு பதிலை வாஹன் வெளிப்படுத்தியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை