இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். இந்திய அணிக்காக பலமுறை அபாரமாக பந்துவீசி வெற்றியைத் தேடித்தந்த பெருமையும் இருவருக்கு உண்டு.
Advertisement
கடந்த 2017ஆம் ஆண்டு புவனேஷ்வர் குமார், நுபுர் நாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் இவர்களுக்க்கு நேற்றைய தினம் பெண் குழந்தை பிறந்துள்ளது.
Advertisement
இத்தகவலை புவனேஷ்வர் குமார் தனது சமூக வலைதள பக்கங்களின் மூலம் உறுதிசெய்தார். இதையடுத்து புவனேஷ்வர் குமார் மற்றும் அவரது மனைவிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
முன்னதாக சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் பிரதான பந்துவீச்சாளராக புவனேஷ்வர் குமார் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.