IND vs ENG: இந்திய டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி!

Updated: Sat, Jan 11 2025 20:54 IST
Image Source: Google

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடர் 22ஆம் தேதியும், ஒருநள் தொடரானது பிப்ரவரி 6ஆம் தேதி முதலும் நடைபெறவுள்ளது. 

இத்தொடருக்கான ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணியில் நட்சத்திர வீரர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், பென் டக்கெட், ஹாரி புரூக், கஸ் அட்கின்சன், லியாம் லிவிங்ஸ்டோன், கஸ் அட்கின்சன், பில் சால்ட் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளார். 

இந்நிலையில் இங்கிலாந்து டி20 தொட்ருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணியில் துணைக்கேப்டாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். மேஉம் இந்த  அணியில் காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி இடம்பிடித்துள்ளார். முன்னதாக கடந்த 2023ஆம் ஆண்டு ஐசிசி உலகக்கோப்பை தொடரின் போது காயமடைந்த அவர், அதன்பின் தற்போது தான் சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். 

இதுதவிர்த்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ் கோப்பை தொடரில் விளையாடிய துரூவ் ஜூரெல், வாஷிங்டன் சுந்தர், நிதீஷ் குமார் ரெட்டி, ஹ்ர்ஷித் ராணா உள்ளிட்டோருக்கும் இந்த டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமாயம் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ரிஷப் பந்த், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இருப்பினும் உச்சட்கட்ட ஃபார்மில் உள்ள சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோருடன் இணைந்து ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தங்கள் இடங்களைத் தக்கவைத்துள்ளனர். மேலும் சமீப காலங்களில் சோபிக்க தவறிய அபிஷேக் சர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.  

இந்திய டி20 அணி: சூர்யகுமார் யாதவ் (கே), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல்.

Also Read: Funding To Save Test Cricket

இங்கிலாந்து டி20 அணி: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஜேமி ஸ்மித், லியாம் லிவிங்ஸ்டோன், ஆதில் ரஷித், சாகிப் மஹ்மூத், பில் சால்ட், மார்க் வுட்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை