இந்திய அணியின் அடுத்தடுத்த தொடர்களுக்கான அட்டவணையை அறிவித்தது பிசிசிஐ!

Updated: Tue, Jul 25 2023 21:04 IST
Image Source: Google

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றி இருக்கிறது. இதற்கு அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி 27 ஆம் தேதி துவங்குகிறது.

இதையடுத்து இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் இதை முடித்துக் கொண்டு அங்கிருந்து நேராக அயர்லாந்து பறந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அதன்பின் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் இந்திய அணிக்கு அடுத்து நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராவதற்கு மிகவும் முக்கியமான ஒரு தொடராக இருக்கும்.

இதற்கு அடுத்து இந்திய அணி உள்நாட்டில் விளையாட இருக்கும் 4 முக்கியமான தொடர்களுக்கான அட்டவணை பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டு இருக்கிறது. இந்த நான்கு தொடரை மொத்தம் மூன்று அணிகளுக்கு எதிராக இந்தியா 2023 மற்றும் 2024 ஜனவரி வரை விளையாடுகிறது.

அதன்படி, வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுடன் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அதைத்தொடர்ந்து நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுடன் 5 டி20 போட்டிகளிலும், பின் அடுத்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானுடன் 3 டி20 போட்டிகளிலும், அடுத்தாண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடவுள்ளது. அதன்படி, 

இந்தியா – ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்

  • செப்டம்பர் 22 – மொகாலி
  • செப்டம்பர் 24 – இந்தூர்
  • செப்டம்பர் 27 – ராஜ்கோட்

இந்தியா – ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 

  • நவம்பர் 23 – விசாகப்பட்டினம்
  • நவம்பர் 26 – திருவனந்தபுரம்
  • நவம்பர் 28 – கவுகாத்தி
  • டிசம்பர் 01 – நாக்பூர்
  • டிசம்பர் 03 – ஹைதராபாத்

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 

  • ஜனவரி 11 – மொகாலி
  • ஜனவரி 14 – இந்தூர்
  • ஜனவரி 17 – பெங்களூர்

இந்தியா – இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 

  • ஜனவரி 25 – ஹைதராபாத்
  • பிப்ரவரி 02 – விசாகப்பட்டினம்
  • பிப்ரவரி 15 – ராஜ்கோட்
  • பிப்ரவரி 23 – ராஞ்சி
  • மார்ச் 07 – தர்மசாலா
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை