என்னை விட புதிய பந்தில் பும்ரா நல்ல கட்டுப்பாட்டை கொண்டிருக்கிறார் - வாசிம் அக்ரம்!

Updated: Mon, Oct 30 2023 22:43 IST
Image Source: Google

ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சொந்த மண்ணில் அசத்தி வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணி நேற்று நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியான 6ஆவது வெற்றியை பதிவு செய்தது. லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோஹித் சர்மா 87, சூர்யகுமார் யாதவ் 49 ரன்களை எடுத்த உதவியுடன் 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதை துரத்திய இங்கிலாந்து ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 34.5 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை சந்தித்ததால் இத்தொடரிலிருந்து லீக் சுற்றுடன் வெளியேறுவது 99% உறுதியாகியுள்ளது. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டி அரையிறுடதி வாய்ப்பை உறுதி செய்துள்ள இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4, பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இந்நிலையில் இப்போட்டியில் ஷமியை விட பும்ரா ஸ்விங் செய்து அபாரமாக பந்து வீசியது ஆச்சரியத்தை கொடுத்ததாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். குறிப்பாக சுல்தான் ஆஃப் ஸ்விங் என்று அனைவராலும் பாராட்டப்படும் அவர் தம்மை விட புதிய பந்தில் அதிக கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் பும்ரா பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “தற்போது அவர் உலகின் சிறந்த பவுலராக இருக்கிறார். கட்டுப்பாடு, வேகம், வேரியசன் போன்ற அனைத்திலும் முழுமையான பவுலராக செயல்படும் அவரை பார்ப்பது விருந்தாக இருக்கிறது. குறிப்பாக புதிய பந்தில் இது போன்ற பிட்ச்சில் வேகம், கேரி, பாலோ போன்றவற்றை கொண்டிருக்கும் அவரை நீங்கள் முழுமையான பவுலர் என்று தாராளமாக சொல்லலாம்.

“குறிப்பாக அரௌண்ட் தி விக்கெட் திசையில் இருந்து இடது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக பும்ரா வீசும் போது சீமை அடிக்கிறார். அதே போல வெள்ளைக்கோட்டுக்கு அகலமாக இருந்து வீசும் போது பேட்ஸ்மேன் பந்து உள்ளே வரும் என்று கருதி கோணத்திற்கேற்ப விளையாட நினைத்து பந்தை தவிர விடுகின்றனர். சில சமயங்களில் நான் வலது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவுட் ஸ்விங் பந்துகளை வீசும் போது கட்டுப்பாடு இல்லாமல் செயல்படுவேன்

ஆனால் என்னை விட புதிய பந்தில் பும்ரா நல்ல கட்டுப்பாட்டை கொண்டிருக்கிறார். இப்படி பும்ரா ஏன் பாகிஸ்தான் பவுலர்களை விட அச்சுறுத்தலாக இருக்கிறார். ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுகிறார். ஆனால் பாகிஸ்தான் பவுலர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை