இந்திய அணி இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும்- மாண்டி பனேசார்! 

Updated: Tue, Jun 06 2023 11:46 IST
Image Source: Google

சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் தகுதி பெற்றுள்ளன. டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும், டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி இன்று லண்டனின் ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த இரு அணிகள் இடையேயான இந்த டெஸ்ட் போட்டி மீது அதிகமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைகளுக்கு, டெஸ்ட் சாம்பியன்சிப் கோப்பையையும் சளைத்தது இல்லை என்பதால், ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இதனால் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பலர் இந்த போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக இங்கிலாந்து மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதால் அதற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு அணிக்கும் பல அறிவுரைகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பேனசார்., ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு சுழற்-பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினால் இந்திய அணிக்கு சாதகமாக அமையும் என்று அறிவுரை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மான்டி பேனசார் பேசுகையில், “இங்கிலாந்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி, ஒரேயொரு பிட்ச்சில்தான் நீங்கள் விளையாட போகிறீர்கள். இதனால் இரண்டு சுழற் பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடுங்கள் பந்து திரும்பினாலோ அல்லது பவுன்ஸ் ஆனாலும் அது சுழற் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும். என்னுடைய பார்வையில் ஓவல் மைதானத்தில் விக்கெட் பிளாட்டாக உள்ளது. இதனால் இந்திய அணிக்கு இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடினால் அது பலமாக இருக்கும்.

இதற்கு முன்பு பலமுறை நாம் ஆஸ்திரேலிய அணி பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக தடுமாறியதை பார்த்துள்ளோம். குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் தினரியதை பலமுறை படித்துள்ளோம்.இதனால் சுழற்பந்து வீச்சாளர்களை சரியாக பயன்படுத்த வேண்டும். மைதானத்தில் புற்களும் அந்த அளவிற்கு கிடையாது, எனவே போட்டி குறைந்தபட்சம் நான்கு நாட்கள் நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை