மகளிர் டி20 உலகக்கோப்பை: மூனி, லெனிங் அதிரடி; இந்திய அணிக்கு 173 டார்கெட்!

Updated: Thu, Feb 23 2023 20:04 IST
India need 173 to reach the Women's T20 World Cup final! (Image Source: Google)

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் எட்டாவது சீசன் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்று வரும் முதலாவது அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது.

அதன்படி கேப்டவுனில் உள்ள நியூலேண்ட்ஸில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து . இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் இப்போட்டியில் விளையாடுகிறார்.

இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு அலிசா ஹீலி - பெத் மூனி இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அலிசா ஹீலி 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் இருந்த பெத் மூனி அரைசதம் கடந்து அசத்தினார். பின் 54 ரன்கள் எடுத்த நிலையில் பெத் மூனியும் ஆட்டமிழந்தார். 

பின்னர் வந்த மெக் லெனிங் - ஆஷ்லே கார்ட்னர் ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்கோரும் உயர்ந்தது. பினர் 31 ரன்கள் எடுத்த நிலையில் கார்ட்னர் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மெக் லெனிங் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 49 ரன்களைச் சேர்த்து அசத்தினார். 

இதன்மூலம் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்து அசத்தியது. இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா, ராதா யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை