டி20 உலகக்கோப்பை: இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா!

Updated: Sat, Oct 15 2022 22:24 IST
India need to make sure they take lots of hard catches in practice sessions: Suresh Raina (Image Source: Google)

டி20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களங்களில் துவங்க உள்ளது. ஆஸ்திரேலியாவில் நடைபெற இந்த தொடருக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளது.

நாளை இந்த தொடரின் முதல் போட்டி நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக கடந்த சில தினங்களுக்கே முன்பு ஆஸ்திரேலியா சென்றுவிட்ட ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள், உலகக்கோப்பை தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி 23ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், கிரிக்கெட் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்காக இருப்பதால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் எதிர்வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர். எந்த எந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்பது குறித்தும் பேசும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா, முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்திவிட்டால், சாம்பியன் பட்டத்தை வெல்வது கூட இந்திய அணிக்கு இலகுவாகிவிடும் என முன்னாள் இந்திய வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசுகையில், “இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது சவாலான விசயம் தான். இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி அதிக சவால் நிறைந்த போட்டி, இரு அணி வீரர்களும் கடும் நெருக்கடியுடனே இந்த போட்டியில் விளையாடுவார்கள். 

பெரிதாக எதை பற்றியும் யோசிக்காமல் இந்திய வீரர்கள் தங்களது இயல்பான ஆட்டத்தை ரசித்து விளையாட வேண்டும் என்பதே எனது கருத்து. ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் சவால் நிறைந்தது. இந்திய அணி 15 நாட்களுக்கு முன்பாகவே ஆஸ்திரேலியா சென்று, பயிற்சி போட்டிகளிலும் விளையாடியது நிச்சயம் இந்திய அணிக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்திய அணியை 15 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பிய பிசிசிஐயின் முடிவை நான் வரவேற்கிறேன். 

முன் எப்போதும் இது போன்று நடந்தது இல்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திவிட்டால் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம் வெல்வது கூட இலகுவாகிவிடும். முதல் போட்டியில் பாகிஸ்தான் போன்ற வலுவான அணியை வீழ்த்திவிட்டால் அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி எவ்வித நெருக்கடியும் இல்லாமல் பாசிட்டிவ் எண்ணத்துடன் விளையாடுவார்கள்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை