இரு வாரங்களுக்கு முன் ஆஸி சென்றது ஏன்? ரோஹித் விளக்கம்!

Updated: Thu, Oct 20 2022 15:36 IST
Image Source: Google

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.  மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. 

நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.  டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக சூப்பர் 12 சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன.

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் பெர்த்தில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் பிசிசிஐக்கு பேட்டியளித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் உலகக் கோப்பையை வென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அணியின் நோக்கமே உலகக் கோப்பையை வெல்வதுதான். பல விஷயங்களைச் சரியாகச் செய்தால் தான் உலகக் கோப்பையை வெல்ல முடியும் என்பதை அறிந்துள்ளோம். 

எனவே ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கிறோம். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் அவை சொந்த மண்ணில் விளையாடப்பட்டவை. ஆஸ்திரேலியாவில் புது சவால்கள் உள்ளன. 

இந்தச் சூழலை நாங்கள் பழகிக் கொள்வது நல்லது. எங்களுடைய வீரர்களில் சிலர் இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு வந்ததே இல்லை. எனவே சூழலைப் பழகிக் கொள்வதற்காக முன்பே ஆஸ்திரேலியாவுக்கு வந்துவிட்டோம்” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை